கண்டிப்பாக எல்லாரும் வாசிக்கவும். இல்லையெனில் Telegram ஐ பயன்படுத்துவது மிகக்கடினமாகி விடும்.
சற்று பெரிய பதிவுதான். தயவுசெய்து நேரம் எடுத்து வாசிக்கவும். Bot ஐ பற்றி அறிய முன்னர் Telegram இல் இணைந்தவுடன் ஒவ்வொருவரும் கட்டாயமாக செய்யவேண்டிய விடயங்களை பார்ப்போம்.
01. Telegram இல் உங்களை ஒருவர் தொடர்பு கொள்ள இரண்டு வழி உண்டு.
I. உங்களது Phone NumberII. உங்களது Username
Username ஐ பயன்படுத்துவது பாதுகாப்பானது.
ஆகவே Settings சென்று Username ஐ “None” இலிருந்து வேறொரு பெயருக்கு மாற்றவும். அதனையே Username ஆக பயன்படுத்தவும்.
தயவுசெய்து பெண் மாணவிகள் தங்களுடைய பெயரை Username ஆக வைப்பதை தவிர்க்கவும்.
02. சில வேளைகளில் எனது Bot ஆனது இயங்காமல் போகலாம்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் /start எனும் Message ஐ bot இல் அனுப்பவும் மீண்டும் பழைய படி இயங்கும். அல்லது மேலே Bot Name இற்கு அருகில் 3 புள்ளிகள் (Menu) இருக்கும். அதை Click செய்து Clear History என்பதை Click செய்யவும். அவ்வாறு செய்யும் போது Bot புதிதாக இருப்பதை போல வரும். Bot இல் அதுவரை வந்த அனைத்து Message உம் அழிந்து விடும்.
ஆகவே நீங்கள் Bot இல் PDF/Video/Photo எதாவது ஒன்றை Download செய்தால் உடனடியாக அந்த PDF/Video/Photo இற்கு அருகில் (வலது மேல் மூலையில்) 3 புள்ளிகள் இருக்கும் அதை Click செய்து Save To Download என்பதை Click செய்வதன் மூலம் நீங்கள் Download செய்த கோப்புகளை உங்கள் Phone இலுள்ள Download File இல் Save செய்து கொள்ளலாம். அப்படி செய்தால் நீங்கள் Clear History கொடுத்தாலும் இதுவரை Download செய்த அனைத்து கோப்புகளும் உங்கள் Download File இல் இருக்கும்.
இந்த Bot இல் உங்களது தொலைபேசி இலக்கம் மறைவாகவே இருக்கும். Telegram அட்மினுக்குக் கூட உங்களது இலக்கத்தை பார்க்க முடியாது.
Telegram உம் WhatsApp போன்றதே. ஆனால் மிகச்சிறப்பானது மற்றும் பாதுகாப்பானது.
இந்த Bot அமைப்பு ஏனைய Channels, Groups, Broadcast களை விட வேறுபட்டது.
இதில் அரட்டைகள் அடிக்க முடியாது.
ஏனைய அங்கத்தவர்கள் பற்றி அறியவோ, அணுகவோ முடியாது. இதில் Registration கிடையாது. நீங்கள் Bot இல் எது செய்தாலும் யாராலும் அறிய முடியாது.
Bot என்பது ஒரு குழு அல்ல. ஒருவர் பயன்படுத்துவதை மற்றவர் அறிய முடியாது. இன்னும் சிறப்பு என்னவென்றால் பெண்களுக்கு இது பாதுகாப்பானது. ஏனென்றால் உங்கள் Mobile Numbers ஐ யாராலும் அறிய முடியாது.(அட்மினால் கூட அறிய முடியாது).
(அளவுக்கு அதிகமாக இல்லாமல் தேவையான அளவு விடயங்கள் உள்ளன. ஆனால் எதிர் வரும் காலங்களில் ஏனைய பல விடயங்களும் பதிவிடப்படும்.)
- கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் (1975 - 2022)
- விளக்கவுரைகள் (1994 - 2020)
- Model/Pilot வினாத்தாள்கள். (Moratuwe, Provincial, FWC, Etc…)
- தவணை பரீட்சை வினாக்கள்.
- சிறுகுறிப்புகள்
- கல்வித்திணைக்கள வினாத்தாள்கள்.
- கடந்தகால பல்தேர்வு வினாக்களின் தொகுப்பு (1979 - 2020)
- கடந்தகால வினாக்களின் புள்ளித்திட்டம்.
- ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள்.
- பாடத்திட்டங்கள்.
- பரிசோதனை கையேடு.
- Motivatinal Thoughts
- General Knowledge
- Physics Practical Lab
போன்ற இன்னும் பல விடயங்கள் உள்ளன.
தயவு செய்து வேறு போலியான Bot, Channel, Groups களை அணுக வேண்டாம்.
இது போலவே நல்ல தரமான சில Bot கள் உள்ளன.
அவற்றில் பௌதிகவியல் மாத்திரம் அன்றி ஏனைய பாடங்களுக்கான கோப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
Ex : FRScienceBot, SL Physical and Bio Bot, Our Families Education
- உங்களுக்கு தேவையான Files ஐ Request செய்யலாம்.
- உங்களிடம் இருக்கும் Files ஐ Admin க்கு அனுப்பலாம்.
- A/L கல்வி கற்கும் முறைகளையும் கற்றுக்கொள்ளலாம்.
இங்கு கிடைக்கும் Files கள் PDF எனும் வகையை சேர்ந்தவை. சில வேலைகளில் உங்களால் அந்த File ஐ Open செய்ய முடியாமல் போகலாம்.
அவ்வாறு Open செய்ய முடியாத போது PlayStore இல் Adobe Reader எனும் App ஐ install செய்து கொள்ளுங்கள்.
உதாரணமாக எனக்கு Physics Syllabus வேண்டுமெனில் நான் செய்ய வேண்டியது....
முதலில் (அவசியம் எனின்) கீழே 🎛 👈 இவ்வாறு உள்ள பகுதியை Click செய்யவும்.
Click செய்த பின்னார் உங்களுக்கு Bot Buttons வரும்.
பின்னர் அந்த Button களில் Physics Files ஐ தெரிவு செய்யவும்.
பின் தேவை ஏற்படின் மீண்டும் 🎛 இதை தெரிவு செய்யவும்.
இப்போது Syllabus Button ஐ தெரிவு செய்யவும். இப்போது Syllabus PDF உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறே உங்களுக்கு தேவையான எல்லா File களையும் பெற்றுக்கொள்ளலாம்.
எம்மிடம் 1975 இலிருந்து 2022 வரையான PDFs உண்டு.
ஆனால் இடையிடையில் ஒரு சில கோப்புகள் இல்லாமலும் உள்ளன. (மிகக்குறைந்தளவிலான கோப்புகளே பற்றாக்குறையாக உள்ளன) ஆனால் அதிகமான கோப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும், இல்லாத சில கோப்புகள் விரைவில் பதிவிடப்படும்.
அடிக்கடி புதிதாக வரும் Past Paper மற்றும் ஏனைய Files கள் அனைத்தும் Update செய்யப்படும்.
ஆகவே Bot ஐ அழித்துவிட வேண்டாம்.
PhysicsBrain Bot இல் இணைந்துகொள்ள கீழுள்ள Join Bot என்பதை அழுத்தவும்.